18. திருநாளைப்போவார் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 18
இறைவன்: ?
இறைவி : ?
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : புலையர்
அவதாரத் தலம் : மா ஆதனூர்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : புரட்டாசி - ரோகிணி
வரலாறு : சோழ நாட்டில் ஆதனூர் என்னும் தலத்தில் புலையர் குலத்தில் அவதாரம் செய்தார். இவரது இயற்பெயர் நந்தனார். சிவபக்தி மிகுந்த இவர் சிவாலயங்களில் உள்ள பேரிகை, முழவு, யாழ் முதலிய கருவிகளுக்கு வேண்டிய தோல், நரம்பு, கோரோசனம் போன்றவற்றைக் கொடுத்து வந்தார். திருப்புன்கூருக்கு வருகிறார். குலம் காரணமாக வெளியே இருந்து இறைவனைத் தரிசிக்க நினக்கிறார். ஆனால் இறைவனை நந்தி மறைத்து இருக்கவே வருந்துகிறார். அப்போது இறைவர் நந்தியை விலகி இருக்குமாறு பணிக்கிறார். அவ்வண்ணமே நந்தி விலக நாயனார் இறைவனைத் தரிசித்து மகிழ்கிறார். சிதம்பரம் சென்று நடராஜரைத் தரிசிக்க விரும்புகிறார். காலம் உடனடியாக கைகூடாததால் நாளைப் போவேன் நாளைப் போவேன் என்று தினமும் கூறி வந்ததால் இவரைத் திருநாளைப் போவார் என்று அழைத்தனர். நடராஜர் கோயிலுள் செல்வதற்குத் தம் குலம் தடையாக இருப்பதை நினைத்து வருந்தினார். பெருமான் அவர் கனவில் தோன்றி அந்தணர்கள் வளர்த்துத் தரும் தீயில் மூழ்கி நம்மை வந்து அடைவாயாக என்று அருளினார். அவ்வாறே நாயனாரும் அந்தணர்கள் வளர்த்த தீயில் மூழ்கி எழுந்து இறைவனை வணங்கி வழிபட்டுப் பின்னர் திருவடி அடைந்தார்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து 
விருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே 
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் 
வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார்

- பெ.பு. 1061
பாடல் கேளுங்கள்
 திருப் புன்கூர்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க